கோயில் : 100-திருத்துருத்தி ( குத்தாலம்)
சிவஸ்தலம் பெயர் : திருத்துருத்தி ( குத்தாலம்)
இறைவன் பெயர் : உக்தவேதீஸ்வரர், சொன்னவாறு அறிவார்
இறைவி பெயர் : அரும்பன்ன வளமுலையாள்
தல மரம் : குத்தால மரம் (ஒருவகை ஆத்தி மரம்)
தீர்த்தம் : காவிரி தீர்த்தம், சுந்தர தீர்த்தம், பத்மதீர்த்தம், வடகுளம்
வழிபட்டோர்: உமாதேவியார், வருணண், காளி, அக்னி, சப்த ரிஷிகள் (காசிபர், ஆங்கிரசர், கௌதமர், மார்க்கண்டேயர், வசிஷ்டர்,புலஸ்தியர், அகஸ்தியர்)
எப்படிப் போவது : கும்பகோணத்தில் இருந்து 24 கி.மி. தொலைவிலும் மயிலாடுதுறையில் இருந்து 9 கிமி தொலைவிலும் குத்தாலம் என்ற ஊரில் இத்தலம் அமைந்துள்ளது. திருவேள்விக்குடி, திருஎதிர்கொள்பாடி, திருமணஞ்சேரி ஆகிய பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் இத்தலத்திற்கு அருகாமையில் உள்ளன.
சிவஸ்தலம் பெயர் : திருத்துருத்தி ( குத்தாலம்)
மற்றவை தேவாரம் நிழல்படங்கள்,வழிகாட்டி வரைபடம்
உங்களிடமிருந்துதேவை இந்த கேயில் பற்றி கீழ்கண்ட விபரங்களை நீங்கள் எங்களுக்கு அளித்தால் இந்த இனையத்தில் வெளியிட உதவியாக இருக்கும்
-தேவாரப் பதிகம் :-சிறப்புகள் : -விழாக்கள் : -நிர்வாகம் : -கட்டியது -கட்டிய ஆண்டு-மீளகட்டியது-பூசைகாலம்- கும்பாபிசேகம்-கோயில்வகை-கிராமம்/நகரம்-மாவட்டம் : -மாநிலம் :-அலுவலக தொலைபேசி: -பக்தர் தொலைபேசி : -ஆலய முகவரி : -குருக்கள் முகவரி : -அன்பர்கள் முகவரி : -பேருந்து நிறுத்தம் : -தொடர்வண்டி நிலையம் : -விமான நிலையம் : - பூமத்தியரேகை
விவரம் அளிக்க இங்கே தட்டவும்
ஆலயம் பற்றி :

கோவில் ராஜகோபுரம் வழியாக உள்ளே நுழைந்தவுடன் ஸ்தல விருட்சமான உத்தால மரமும் அதை சுற்றி உள்ள பீடமும் உள்ளது. மூலவர் சந்நிதி மேற்கு பார்த்து அமைந்திருக்கிறது. பக்கத்திலேயே தெற்குப் பார்த்த இறைவியின் சந்நிதி உள்ளது. இத்தலத்து விநாயகர் துணைவந்த பிள்ளையார் என்ற பெயருடன் அம்பாள் சந்நிதிக்கு செல்லும் வழியில் கோயில் கொண்டிருக்கிறார். அக்னி பகவான் இத்தலத்து இறைவனை வழிபட்டு தன் பாபங்களை போக்கிக் கொண்டுள்ளார். சூரியன், பரத முனிவர் ஆகியோரும் இத்தலத்து இறைவனை வழிபட்டுள்ளனர்.

தற்போது குத்தாலம் என்று அறியப்படும் இத்தலம் தேவாரப் பதிகம் பாடப் பெற்ற காலத்தில் துருத்தி என்று வழங்கப்பட்டது. துருத்தி என்றால் ஆற்றின் இடையில் உள்ள தீவு என்று பொருள் படும். எனவே அக்காலத்தில் இத்தலம் காவிரி நதியின் இடையில் ஒரு தீவாக இருந்திருக்க வேண்டும். திருநாவுக்கரசர் தனது பதிகத்தில் இதைக் குறிப்பிட்டுள்ளார்.

உன்னிஎப் போதும் நெஞ்சுள் ஒருவனை ஏத்துமின்னோ
கன்னியை ஒருபால் வைத்துக் கங்கையைச் சடையுள் வைத்துப் 
பொன்னியின் நடுவுதன்னுட் பூம்புனல் பொலிந்து தோன்றுந்
துன்னிய துருத்தி யானைத் தொண்டனேன் கண்டவாறே

சுந்தரரும் இத்தலத்து இறைவன் மேல் பதிகங்கள் பாடி இருக்கிறார். சங்கிலி நாச்சியாருக்கு திருவொற்றியூரில் செய்து கொடுத்த சத்தியத்தை மீறி அவளைப் பிரிந்து சென்றதால் இரண்டு கண்களையும் இழந்து உடல் நலிந்து திருத்துருத்தி வந்திருக்கிறார். காஞ்சீபுரத்திலும், திருவாரூரிலும் இழந்த கண் பார்வையை மீண்டும் பெற்றாலும் இத்தலத்திற்கு வந்து இங்குள்ள பதும தீர்த்தத்தில் மூழ்கி எழுந்த பிறகே நல்ல உடல் நலம் பெற்றார். இத்தலத்து இறைவன் சொன்னவாறு அறிவார் மேல்

சொன்னவாறு அறிவார் துருத்தியார் வேள்விக்
குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
என்னை நான் மறக்குமாறு எம் பெருமானை 
என்னுடம் படும்பிணி இடர் கெடுத்தானை !

என்று சுந்தரர் பாடியிருக்கிறார்.

...திருசிற்றம்பலம்...
குறிப்பு
Add more details about this temple
Add more photos
Add route map


More details about this temple given by user:
Kuthalam