கோயில் : 097-திருநல்லம் ( கோனேரி ராஜபுரம்)
சிவஸ்தலம் பெயர் : திருநல்லம் ( கோனேரி ராஜபுரம்)
இறைவன் பெயர் : உமா மஹேஸ்வரர், மாமனி ஈஸ்வரர்
இறைவி பெயர் : மங்கள நாயகி, அங்கவள நாயகி
தல மரம் : அரசு
தீர்த்தம் : பிரம தீர்த்தம்
எப்படிப் போவது : கும்பகோணம் - மயிலாடுதுறை ரயில் மார்க்கத்தில் உள்ள ஆடுதுறை ரயில் நிலையத்தில் இருந்து 8 கி.மி. தொலைவில் இத்தலம் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து வடமட்டம் செல்லும் நகரப் பேருந்தில் சென்று கோனேரிராஜபுரம் கூட்டுரோடில் இறங்கி 1 கி.மி. சென்றால் இத்தலத்தை அடையலாம்.
சிவஸ்தலம் பெயர் : திருநல்லம் ( கோனேரி ராஜபுரம்)
மற்றவை தேவாரம் நிழல்படங்கள்,வழிகாட்டி வரைபடம்
உங்களிடமிருந்துதேவை இந்த கேயில் பற்றி கீழ்கண்ட விபரங்களை நீங்கள் எங்களுக்கு அளித்தால் இந்த இனையத்தில் வெளியிட உதவியாக இருக்கும்
-தேவாரப் பதிகம் :- வழிபட்டோர்:-சிறப்புகள் : -விழாக்கள் : -நிர்வாகம் : -கட்டியது -கட்டிய ஆண்டு-மீளகட்டியது-பூசைகாலம்- கும்பாபிசேகம்-கோயில்வகை-கிராமம்/நகரம்-மாவட்டம் : -மாநிலம் :-அலுவலக தொலைபேசி: -பக்தர் தொலைபேசி : -ஆலய முகவரி : -குருக்கள் முகவரி : -அன்பர்கள் முகவரி : -பேருந்து நிறுத்தம் : -தொடர்வண்டி நிலையம் : -விமான நிலையம் : - பூமத்தியரேகை
விவரம் அளிக்க இங்கே தட்டவும்
ஆலயம் பற்றி :
கோவில் விபரம்: முன்பு செங்கல்லால் கட்டப்பட்டிருந்த இக்கோவிலை கற்றளிக் கோவில் ஆக்கிய பெருமை கண்டராதித்த சோழனின் மனைவி செம்பியன் மாதேவி ஆவார். மூலவர் உமாமகேசுவரர் சந்நிதி மேற்குப் பார்த்து உள்ளது. இக்கோவிலில் உள்ள மூலவர் உமாமகேசுவரர் மற்றும் மங்களநாயகின் சந்நிதியைத் தவிர இக்கோவிலில் உள்ள நடராஜர் திரு உருவம் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த செப்புச் சிலை நடராஜர் சுமார் 9 அடி உயரம் உள்ளவர். நடராஜருக்கு ஏற்ற உயரத்தில் சிவகாமி அம்மைக்கும் செப்புச் சிலை உள்ளது. உற்சவ காலங்களில் தெரு உலா வருவதற்காக ஒரு சிறிய நடராஜர் செப்புச் சிலையும் இருக்கிறது. பெரிய நடராஜர் செப்புச் சிலை உருவம் மிகவும் கலை அழகுடன் காட்சி அளிக்கிறது. கோவிலின் வெளியே சக்தி தீர்த்தம் அமைந்திருக்கிறது. பூமாதேவி இத்தலத்து இறைவனை வழிபட்டிருக்கிறாள். தக்ஷினாமூர்த்தி, சூரியன், சந்திரன் ஆகியோருக்கும் இங்கு தனி சந்நிதிகள் இருக்கின்றன.

தல வரலாறு இங்கு இறைவன் (வைத்தியநாதர்), புரூரவமன்னனின் குட்டநோயைத் தீர்த்ததாக சொல்லப்படுகிறது. (இச்சந்நிதியில் ஜபம் செய்தால் பலமடங்கு பயனுண்டு என்று சொல்லப்படுகிறது). சிறப்புக்கள் கண்டராதித்த சோழன் மனைவியான செம்பியன் மாதேவியின் திருப்பணிப் பெற்ற தலம். கல்வெட்டில் இறைவன் 'திருநல்லம் உடையார் ' என்று குறிக்கப்படுகிறார். இங்குள்ள கல்வெட்டுக்கள் இராசராசன், இராசேந்திரன், முதலாம் இராசாதிராசன், இரண்டாம் இராசேந்திரன், முதலாம் குலோத்துங்கன் காலத்தியவை. வேங்கிபுரம் முதலிப்பிள்ளை என்பவன் நன்கொடையால் கோயில் கட்டப்பட்டதாகவும், 'நக்கன் நல்லத் தடிகள்' என்பவனால் சண்டேசுவரர் உற்சவத் திருமேனி செய்து தரப்பட்டது என்றும், குந்தவை பல நன்கொடைகளைக் கோயிலுக்குத் தந்துள்ளாள் என்றும் பல செய்திகள் கல்வெட்டு வாயிலாக தெரிய வருகின்றன. தலபுராணம் சமஸ்கிருதத்தில் உள்ளது. காரணாகம முறைப்படி பூசைகள் நடைபெறுகின்றன.

...திருசிற்றம்பலம்...
குறிப்பு
Add more details about this temple
Add more photos
Add route map


More details about this temple given by user:
KoneriRajapuram