கோயில் : 076-திருசோற்றுத்துறை
சிவஸ்தலம் பெயர் : திருசோற்றுத்துறை
இறைவன் பெயர் : தொலையாச்செல்வர், ஓதவனேஸ்வரர்
இறைவி பெயர் : அண்ணபூரணி, ஒப்பிலா அம்மை
தீர்த்தம் : காவிரி
வழிபட்டோர்: இந்திரன், சூரியன், கௌதமர்
எப்படிப் போவது : தஞ்சாவூரில் இருந்து 13 கி.மி. தொலைவிலும், திருக்கண்டியூர் சிவஸ்தலத்தில் இருந்து 4 கி.மி. தொலைவிலும் இத்தலம் அமைந்திருக்கிறது. திருசோற்றுத்துறையில் இருந்து தெற்கே 3 கி.மி. தொலைவில் திருவேதிக்குடி என்ற மற்றொரு பாடல் பெற்ற ஸ்தலம் இருக்கிறது.
சிவஸ்தலம் பெயர் : திருசோற்றுத்துறை
மற்றவை தேவாரம் நிழல்படங்கள்,வழிகாட்டி வரைபடம்
உங்களிடமிருந்துதேவை இந்த கேயில் பற்றி கீழ்கண்ட விபரங்களை நீங்கள் எங்களுக்கு அளித்தால் இந்த இனையத்தில் வெளியிட உதவியாக இருக்கும்
-தேவாரப் பதிகம் :-தல மரம் :-சிறப்புகள் : -விழாக்கள் : -நிர்வாகம் : -கட்டியது -கட்டிய ஆண்டு-மீளகட்டியது-பூசைகாலம்- கும்பாபிசேகம்-கோயில்வகை-கிராமம்/நகரம்-மாவட்டம் : -மாநிலம் :-அலுவலக தொலைபேசி: -பக்தர் தொலைபேசி : -ஆலய முகவரி : -குருக்கள் முகவரி : -அன்பர்கள் முகவரி : -பேருந்து நிறுத்தம் : -தொடர்வண்டி நிலையம் : -விமான நிலையம் : - பூமத்தியரேகை
விவரம் அளிக்க இங்கே தட்டவும்
ஆலயம் பற்றி :

தல வரலாறு

  • வழிபடும் அடியவர்களின் பசிப் பிணி தீர, இறைவன் உணவு வழங்குபவன்; ஆதலின் இத்தலம் சோற்றுத்துறை எனப்பட்டது. (பிறவிப்பிணி தீர இறைவன் வீடு பேறு வழங்குபவன் என்பது பொருள்.)

  • அடியார்கள் பசிப்பிணியால் வருந்தியபோது இறைவன் அக்ஷய பாத்திரம் வழங்கி அனைவரின் பசியையும் போக்கியதால் இறைவன் இறைவிக்குத் தொலையாச் செல்வர், அன்னபூரணி என்ற திருப்பெயர்கள் வழங்கலாயிற்று.

சிறப்புக்கள்

  • இது சப்தஸ்தானத் தலங்களுள் ஒன்று.
  • ஊர்ப்பெயருக்கேற்ப சப்தஸ்தான விழாவில் ஏழூர்வலம் வரும் அடியார்களுக்கு இங்கு அன்னம் பாலிப்பு நடைபெறுகிறது.
  • தலப் பதிகக் கல்வெட்டுக்கள் உள்ளன.
  • இத்தலத்திற்குச் மேலும் சிறப்பு சேர்க்கும் மூர்த்தியாக அர்த்த மண்டப நுழைவு வாயிலில் பெரிய ஆறுமுகப் பெருமான் மூர்த்தம் உள்ளது.
  • தனிக்கோயிலில் அம்பாள் திருமணக்கோலமாக காட்சி தருகிறாள்.
  • முதலாம் ஆதித்த சோழன் இக்கோயிலுக்குப் பல திருப்பணிகளைச் செய்துள்ளான். சோழர் காலக் கல்வெட்டுக்கள் இக்கோயிலுக்கு அம்மன்னர்கள் விளக்கெரிக்கவும், நிவேதனத்திற்காகவும், விழாக்கள் எடுக்கவும் நிலமும் பொன்னும் தந்த செய்திகளைத் தெரிவிக்கின்றன.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
திருவையாற்றிலிருந்து நிறைய பேருந்து வசதிகள் உள்ளன.
...திருசிற்றம்பலம்...

குறிப்பு
Add more details about this temple
Add more photos
Add route map


More details about this temple given by user:
Choruthurai