கோயில் : 056-திருக்கானூர்
சிவஸ்தலம் பெயர் : திருக்கானூர்
இறைவன் பெயர் : செம்மேனிநாதர், கரும்பேஸ்வரர்
இறைவி பெயர் : சிவலோக நாயகி, சௌந்தரநாயகி
தீர்த்தம் : கொள்ளிடம்
வழிபட்டோர்: அக்கினி.
எப்படிப் போவது : திருக்காட்டுப்பள்ளியில் இருந்து 6 Km தொலைவில் ( திருக்காட்டுப்பள்ளி - திருக்கண்டியூர் சாலை வழி ) கொள்ளிடம் நதியின் கரையில் விஷ்னம்பேட்டை அக்ரஹாரம் என்ற இடத்தின் அருகாமையில் திருக்கானூர் சிவஸ்தலம் அமைந்துள்ளது. அருகில் உள்ள ரயில் நிலையம் பூதலூர். இது திருச
சிவஸ்தலம் பெயர் : திருக்கானூர்
மற்றவை தேவாரம் நிழல்படங்கள்,வழிகாட்டி வரைபடம்
உங்களிடமிருந்துதேவை இந்த கேயில் பற்றி கீழ்கண்ட விபரங்களை நீங்கள் எங்களுக்கு அளித்தால் இந்த இனையத்தில் வெளியிட உதவியாக இருக்கும்
-தேவாரப் பதிகம் :-தல மரம் :-சிறப்புகள் : -விழாக்கள் : -நிர்வாகம் : -கட்டியது -கட்டிய ஆண்டு-மீளகட்டியது-பூசைகாலம்- கும்பாபிசேகம்-கோயில்வகை-கிராமம்/நகரம்-மாவட்டம் : -மாநிலம் :-அலுவலக தொலைபேசி: -பக்தர் தொலைபேசி : -ஆலய முகவரி : -குருக்கள் முகவரி : -அன்பர்கள் முகவரி : -பேருந்து நிறுத்தம் : -தொடர்வண்டி நிலையம் : -விமான நிலையம் : - பூமத்தியரேகை
விவரம் அளிக்க இங்கே தட்டவும்
ஆலயம் பற்றி :

தல வரலாறு

  • 1924-ல் வெள்ளம் வந்தபோது கோயில் முழுவதும் மூடிவிட்டது. அதன்மீது ஒரு கரும்பு மட்டுமே முளைத்திருக்கக் கண்டு, திரு. என். சுப்பிரமணியஐயர் என்பர் முயன்று தோண்டிப் பார்த்தபோது கோயில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் இப்பெருமானுக்கு கரும்பேஸ்வரர் என்று பெயராயிற்று.

  • (திருக்கானூர் என்னும் ஊர்ப் பெயர் மாறி, இன்று மக்கள் குடியிருப்பு ஒருசிலவே இருப்பதாலும், மணற்பகுதியை அடுத்திருப்பதாலும் மக்கள் இவ்விடத்தை மணல் மேடு என்றே வழங்குகின்றனர்.)

சிறப்புக்கள்

  • விமானம் ஏகதளம் - உருண்டை வடிவமானது.

  • அம்பாள் சாளக்ராம விக்ரஹம்.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
(தனிப் பேருந்தில், வாகனங்களில் வருவோர்) திருக்கண்டியூரிலிருந்து, சிவாலயத்திற்கு நேர் எதிரில் செல்லும் திருக்காட்டுப் பள்ளிச் சாலையில் சென்று திருக்காட்டுப்பள்ளியை அடைந்து, அங்கிருந்து காவிரிப் பாலத்தைத் தாண்டி, வலப்புறமாக பிரிந்து செல்லும் கும்பகோணம், மயிலாடுதுறை பாதையில் சிறிது தூரமே வந்து, உடனே இடப்புறமாகப் பிரியும் விஷ்ணம்பேட்டை சாலையில் திரும்பிச் சென்று, விஷ்ணம்பேட்டையை அடைந்து, (வாகனத்தை அங்கேயே நிறுத்திவிட்டு) திருக்கானூர் கோயிலுக்குச் செல்லும் வழியைக் கேட்டறிந்து அச்சாலையில் (மண்சாலை) நடந்து செல்ல வேண்டும். வயல்களின் நடுவே செல்லும் இச்சாலையின் முடிவில் மக்கள் குடியிருக்கும் பகுதிவரும்; அங்கிருந்து மணலில் கொஞ்ச தூரம் நடந்து மேட்டைக் கடந்து கொள்ளிடக் கரைமீதேறி வலப்புறமாகத் திரும்பி சென்றால் சிறிது தூரத்தில் கோயிலை அடையலாம். (விஷ்ணம்பேட்டையில் இருக்கும் குருக்களை அழைத்துக்கொண்டுதான் தரிசனத்திற்கு செல்ல வேண்டும்.)
...திருசிற்றம்பலம்...

குறிப்பு
Add more details about this temple
Add more photos
Add route map


More details about this temple given by user:
ThiruKanur