கோயில் : 046-திருப்புறம்பியம்
சிவஸ்தலம் பெயர் : திருப்புறம்பியம்
இறைவன் பெயர் : சாட்சி நாதேஸ்வரர்
இறைவி பெயர் : கரும்பன்ன சொல்லம்மை
தல மரம் : புன்னை
தீர்த்தம் : பிரம தீர்த்தம், சப்த சாகர தீர்த்தம், மண்ணியாறு, கொள்ளிடம்
வழிபட்டோர்: அகத்தியர், புலஸ்தியர், சனகர், சனந்தனர், விஸ்வாமித்ரர்
எப்படிப் போவது : கும்பகோணத்தில் இருந்து 11 கி.மி. தொலைவில் கொள்ளிட நதிக்கரையில் இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது. திருப்புறம்பியம் செல்ல கும்பகோணத்தில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் உண்டு.
சிவஸ்தலம் பெயர் : திருப்புறம்பியம்
மற்றவை தேவாரம் நிழல்படங்கள்,வழிகாட்டி வரைபடம்
உங்களிடமிருந்துதேவை இந்த கேயில் பற்றி கீழ்கண்ட விபரங்களை நீங்கள் எங்களுக்கு அளித்தால் இந்த இனையத்தில் வெளியிட உதவியாக இருக்கும்
-தேவாரப் பதிகம் :-சிறப்புகள் : -விழாக்கள் : -நிர்வாகம் : -கட்டியது -கட்டிய ஆண்டு-மீளகட்டியது-பூசைகாலம்- கும்பாபிசேகம்-கோயில்வகை-கிராமம்/நகரம்-மாவட்டம் : -மாநிலம் :-அலுவலக தொலைபேசி: -பக்தர் தொலைபேசி : -ஆலய முகவரி : -குருக்கள் முகவரி : -அன்பர்கள் முகவரி : -பேருந்து நிறுத்தம் : -தொடர்வண்டி நிலையம் : -விமான நிலையம் : - பூமத்தியரேகை
விவரம் அளிக்க இங்கே தட்டவும்
ஆலயம் பற்றி :
தல வரலாறு பிரளய காலத்தில், வெள்ளம் ஊரினுள் புகாதவாறு தடைப்பட்டு, புறத்தே நின்றமையால், இப்பெயர் பெற்றது. இத்தல விநாயகர் பிரளயம் காத்த விநாயகர் எனப்படுகிறார். ஒரு வணிகப் பெண்ணிற்காக, இவ்வூர் இறைவன் மதுரை சென்று, சாட்சி கூறினமையால், சாட்சி நாதர் எனப் பெற்றார். வன்னி மரம், கிணறு, மடைப்பள்ளி (மதுரையிலுள்ளது.) சனகர் முதலிய நால்வருக்கு இறைவன், இத்தலத்தில் அறத்தை உணர்த்தினார். சிறப்புக்கள் இத்தல விநாயகர் (பிரளயங்காத்த விநாயகர்) சிப்பி, சங்குகளால் ஆக்கப்பெற்றவர். ஆண்டுதோறும், ஆவணி மாதத்துச் சதுர்த்தியில் ஒரு ஆடம் தேன் அபிஷேகம் நடைபெறுகிறது. அவ்வளவு தேனும் அவர் திருமேனியில் சுவறி விடுகிறது. இக் கோவில் பணிமகள் ஒருவரைக் கொன்று, அவ்வம்மையாருடைய அணிகலன்களை திருடிய ஒடம் விடுபவன், தானும் ஆற்றைக் கடப்பதற்குள், ஆற்றில் தவறி விழுந்து இறந்தான். இச்செய்தியைச் சுந்தரர், தம் பாடலில் குறிப்பிட்டுள்ளார். இக் கோவில் மதுரை ஆதீன அருளாட்சிக்கு உட்பட்டது. சோழர் கால கல்வெட்டுகள் 11 படி எடுக்கப்பட்டுள்ளன. ...திருசிற்றம்பலம்...
குறிப்பு
Add more details about this temple
Add more photos
Add route map


More details about this temple given by user:
ThiruPurambiyam